சுலோகங்கள்
நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன்
நவரெத்தினப் பாமாலை
ஆக்கம் : சிவகுரு பரராசசிங்கம் - நயினை( பசிக்கவி)

படத்தில் கிளிக் செய்து சுலோகங்களை காணவும்
நூற் பயன்
   
எவரெத் திறத்தர் எனினும் என்றும்
நலரெத் தினப்பா நாளும் நயந்தே
அவமற் றிடும் அன்பிதயத் தழுத்த
சிவரெத் தினமாய் ஜெகமீ தொளிர்வார்
குறிப்பு :

       நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான அடியார்கள் நவக்கிரகசாந்தி செய்து வருகின்றனர். நவகிரக தோஷ நிவர்த்திக்கு அம்பாளை நினைத்து இப்பாடல்களைப் பாராயணஞ் செய்யும் அடியார்கள் அம்பாளின் அருளால் நவகிரக தோஷ நிவர்த்தி பெற்று நலம் பெறுவார்கள் என்பது நிச்சயம்.
நயினா தீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் மீது பாடப்பட்ட கீர்த்தனம்

பல்லவி:

இராகம்: மோகனம்            தாளம்:ஆதி
நலமருள்வாய் நாகபூஷணி தாயே
தலமதில் சிறந்த நயினை வாழ்வே
நலமருள்வாய்...

அனுபல்லவி :

கைலாய வாகனத்தில் காட்சிதரும் அம்மையே
கைலாய நாதனைப் பாகமாய்க் கொண்டவனே
நலமருள்வாய்...

சரணம் :

மணிபல் லவத்தில் மானண்புடன் எழுந்தருளி
தனியாத தாகங்கொள் பக்தர்களை ஆட்கொள்வாய்
அணிகலனாய்க் கரத்தில் அமுதசுரபியை எற்றவளே
பணியாய்ச் சிவசேவகம் பாங்குடன் கொண்டவள் நீ
நலமருள்வாய்...

நிர்வாகம் | திருவிழாக்கள் | தலப்பெருமை | அமைப்பு | பக்தர்களுக்கு வசதிகள் | பூஜை விவரங்கள்| புகைப்படத் தொகுப்பு | பக்தி பாடல்கள் | சுலோகங்கள் | புராண வரலாறு | சுற்றுலா தகவல்கள் | திருப்பனி விவரங்கள் | இந்த ஆண்டு நடப்புகள்